அறிவோம் தாவரங்களை – குங்குமப்பூ
குங்குமப்பூ.(Saffron)
காஷ்மீர் மற்றும் தென்மேற்கு ஆசியா உன் பிறப்பிடம்!
3000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய காட்டுப்பூ!
கி.மு.7ஆம் நூற்றாண்டில் ஈரான் நாட்டு ‘அசிரிய’ மன்னன் தாவர இயலில் இடம்பெற்ற நீலப்பூ!
ஈரான் நாட்டில் அதிகம் விளையும் வைரப் பூ!
20 செ.மீ.உயரம் வளரும் கிழங்குச்செடி பூ!
கி.பி. 993 வரை ஆசிய நாட்டில் கோமதீஸ்வரர் ஆலயத்தின் அபிஷேகப் பூ!
கற்கால ஈரானின் ஓவியத்தில் இடம் பெற்ற வரலாற்றுப் பூ!
பாரசீகம்,தெற்கு ஆசியா,சீனா எனப் பல்வேறு நாடுகளில் கோலோச்சும் மகரந்தப்பூ!
துணிகளை வண்ண மயமாக்கும் சாயப்பூ!
நறுமணப் பொருள்களின் மூலப்பூ!
சமையல் கட்டின் மசாலாப் பூ!
தேநீர் மற்றும் ஒயின் ரசத்தின் மணம் கூட்டும் வாசப்பூ!
அலெக்சாண்டரின் போர்க் காயங்களை ஆற்றிய லேகியப் பூ!
வலியில்லாப் பிரசவத்தின் எளியப் பூ!
புத்த பெருமானின் அர்ச்சனைப் பூ!
எகிப்து நாட்டு கிளியோபாட்ரா குளியலுக்குப்பயன்படுத்திய குங்குமப்பூ!
ரோமானியர்கள் காதலித்த ஆசைப் பூ!
பார்வைத் திறன்,பாலுணர்வு,ஆஸ்துமா, அழகின்மை, செரிமானம், காயங்கள் என 90 க்கும் மேற்பட்ட நோய்களைப் போக்கும் ஞாழல் பூ!
ஒரு கிலோ ₹4 இலட்சம் வரை விலை போகும் தங்கப்பூ!
உலகில் உயர்ந்த மகிமைப் பூவே!
நீவிர் நலமுடன் நாளும் வாழியவே!
நன்றி : -தியாகராஜன்(VST)
நெய்வேலி.