சென்னை: ஆளுநர் மாற்றம் செய்யப்படுவாரானால், புதிய ஆளுநர் குறித்து மத்தியஅரசு,   தமிழ்நாடு அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர்  பீட்டர் அல்போன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால்  திடீர் டெல்லி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.  பன்வாரிலால் தமிழக ஆளுநகரா கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இதனால் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. புதிய ஆளுநராக  சமீபத்தில் மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்த, மூத்த அமைச்சர்களில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்ற கருத்து நிலவி வருகிறது.

இந்த நிலையில், மூத்த காங்கிரஸ் பிரமுகரும், சிறுபான்மை ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில்  “தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிரதமர்,உள்துறை அமைச்சர சந்திப்பது ஆளுநர்மாற்றம் பற்றிய யூகங்களை எழுப்பியுள்ளது. அது உண்மையானால் புதிய ஆளுநர் நியமனம் பற்றி பிரதமரும் உள்துறை அமைச்சரும் முதலமைச்சரிடம் ஆலோசித்த பின்பே நியமனம் செய்யவேண்டும். அதுதான் கூட்டாட்சி தத்துவம்!” என தெரிவித்துள்ளார்.