சென்னை: தமிழக ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்,  ‘குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால்  புரோகித் நேற்று திடீரென டெல்லி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் அவர் இன்று குடியரசுத் தலைவர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்தை காலையில் சந்தித்த நிலையில் மதியம் பிரதமரை சந்தித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து,  அவர் மாற்றப்படலாம் என தகவல்கள் பரவின. மேலும், தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநராக  முன்னாள் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்  ரவிசங்கர் பிரசாத்தை  நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் டெல்லியில் இருந்து உறுதிப்படாத தகவல்கள் பரவின.

முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கடந்த இரு நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது,  தனது  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், அவருக்கு தமிழ்நாடு கவர்னர் பொறுப்பை வழங்க மோடி அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.