டெல்லி: தொலைதூர கல்வி, திறந்தநிலை கல்விகளுக்கான ஆன்லைன் வகுப்புகளை தொடங்க விண்ணப்பிக்கலாம் என யுஜிசி அறிவித்து உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. ஆனால் ஆன்லைன் மூலம் மாணாக்கர்களுக்கு பாடம் போதிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், யுஜிசி ஆன்லைன் வகுப்புகளை தொடங்கலாம் என தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, யுஜிசி வெளியிட்டுள்ள தகவலில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்க விண்னப்பிக்கலாம் என்று தெரிவித்து உள்ளது. மேலும், . படிப்புகளை தொடங்க ஒருமுறை பதிவுக் கட்டணமாக ரூ.25,000 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொலைதூர கல்வியில் படிப்புகளை தொடங்க ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை பாடத்திற்கேற்ப கட்டணம் கட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.