சென்னை:
அதிமுகவிலிருந்து 2 முன்னாள் எம்எல்ஏக்களை நீக்கம் செய்து கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ப.இளவழகன், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன் ஆகியோர் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கட்சித் தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel