டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 44,459 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 43 ஆயிரத்து 393 பேர். இதன்மூலம், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 52 ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது.
டந்த 24 மணிநேரத்தில் 44 ஆயிரத்து 459 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 88 ஆயிரத்து 284 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி மேலும் 911 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 5 ஆயிரத்து 939 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலையில் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 4 லட்சத்து 58 ஆயிரத்து 727 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 36 கோடியே 89 லட்சத்து 91 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 40,23,173 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 42 கோடியே 70 லட்சத்து 16 ஆயிரத்து 605 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த நேற்று ஒரேநாளில் 17 லட்சத்து 90 ஆயிரத்து 708 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.