சென்னை

மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று சென்னையில் மீண்டும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் செயல்படுகின்றன.

நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டு தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது.  இந்நிலையில் விரைவில் மூன்றாம் அலை கொரோனா பரவல் தொடங்கலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிககை விடுத்துள்ளனர்.   எனவே கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

மத்திய அரசு கொரோனா தடுப்பூசி மருந்துகளை மொத்தமாகக் கொள்முதல் செய்து அவற்றை மாநிலங்களுக்கு பிரித்து அளித்து வருகிறது.   இதனால் தடுப்பூசி மருந்துகள் தட்டுப்பாடு அவ்வப்போது ஏற்படுவதால் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டு மீண்டும் மருந்து கிடைத்தவுடன் பணிகள் தொடங்குகின்றன.

அவ்வகையில் சென்னையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகக் கடந்த 3 நாட்களாகத் தடுப்பூசி முகாம்கள் செயல்படவில்லை.  இன்று அவை மீண்டும் செயல்படும் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  மேலும் தடுப்பூசி போட்டு கொள்வோருக்கு முன்பதிவு தேவை இல்லை எனவும் முகாம்களுக்கு நேரடியாகச் சென்று போட்டு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.