சென்னை
தமிழக ஆயுதப்படை காவலர் நாகநாதன் பாண்டி என்பவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டதற்கு ஆணையர் பாராட்டியுள்ளார்.
டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 9 வரை தடகளப்போட்டிகள் நடைபெறுகின்றனர். இதில் இந்தியா சார்பில் 26 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துக் கொள்கின்றனர். இவர்களின் பெயரை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து 3 வீராங்கனைகள் மற்றும் 2 வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தடகள வீராங்கனைகளான ரேவதி, தனலட்சுமி, சுபா ஆகியோரும் ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் ஆவார்கள். நாகநாதன் பாண்டி சென்னை ஆயுதப்படை காவலர் ஆவார்.
நாகநாதன் பாண்டி 4 x 400 தொடர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்கிறார். இவருக்குச் சென்னை காவல்துறை ஆணையர், “சென்னை ஆயுதப்படையைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலர் திரு.நாகநாதன் பாண்டி என்பவர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் போட்டிக்கு 4×400m Relay பிரிவில் இந்தியாவின் சார்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளமைக்கு எனது பாராட்டுக்கள்.” என வாழ்த்தி உள்ளார்.