டில்லி
வரும் 15 ஆம் தேதி முதல் இந்தியாவில் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிகள் விநியோகம் தொடங்குகிறது.
அமெரிக்க நாட்டு தயாரிப்பான மாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசிகள் 90% செயல் திறன் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் மருந்து நிறுவனமான சிப்லா நிறுவனம் இதை இறக்குமதி செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரியது. இதையொட்டி இந்திய மருந்து கட்டுப்பாடு நிறுவனம் அதற்கான அனுமதி அளித்துள்ளது.
இந்த தடுப்பூசி மருந்து 28 நாட்கள் இடைவெளியில் இரு டோஸ்களாக செலுத்த வேண்டும். இந்த மருந்தை சிப்லா நிறுவனம் இறக்குமதி செய்து மத்திய அரசுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்பட உள்ளது. அவற்றை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு விநியோகம் செய்ய உள்ளது.
கடந்த வாரம் சிப்லா நிறுவனம் அனுமதி பெற்றுள்ள நிலையில் இந்த மருந்தை ஒரு மாத காலத்துக்கு மட்டுமே 2 முதல் 8 டிகிரி வெப்பத்தில் சேமித்து வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் இவற்றை 7 மாதம் வரை சேமிக்க மைனஸ் 20 டிகிரி குளிர்பதன சேமிப்பு பெட்டிகள் தேவைப்படும்.
எனவே பெருநகரங்களில் குளிர் பதன சேமிப்பு வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனைகளில் ஜூலை 15 முதல் இந்த மருந்துகள் விநியோகம் செய்யப்பட உள்ளன
Corona vaccine, US, Moderna, India, July 15,