பாரிஸ்
இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்கள் விற்றதில் முறைகேடு புகார் குறித்து பிரான்ஸ் அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விமானப்படையைப் பலப்படுத்த பிரான்ஸ் நாட்டில் இருந்து ரஃபேல் ரக போர் விமானங்கள் வாங்க அப்போதைய அரசு ஒப்பந்தம் இட்டது. அந்த ஒப்பந்தத்தில் ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பிறகு நடந்த தேர்தலில் ஆட்சி மாறி பாஜக ஆட்சிக்கு வந்தது.
எனவே பழைய ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு புதிய பேச்சு வார்த்தைகள் நடந்தன. இந்திய பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரனுடன் நடந்த இந்த பேச்சு வார்த்தையில் ஒரு விமானத்தின் விலை ரூ.1,607 கோடி என்னும் விலையில் 36 போர் விமானங்களை ரூ.59000 கோடிக்கு வாங்க மறு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சி இதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுப்பியது. மத்திய அரசு அவற்றைத் தொடர்ந்து நிராகரித்து வந்தது. இதற்கிடையே இந்தியாவுக்கு 10க்கும் அதிகமான ரஃபேல் விமானங்கள் பிரான்ஸிலிருந்து வந்துள்ளன. தற்போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புலனாய்வு பத்திரிகையான மீடியாபார்ட் என்னும் பத்திரிகையில் இந்தியத் தரகர் இந்த ஒப்பந்தத்தில் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகச் செய்தி வெளியிட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்த செய்தியின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என பிரான்சில் கோரிக்கைகள் எழுந்தன. எனவே பிரான்ஸ் அரசு ரஃபேவ்ல் விமான ஒப்பந்தம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவு இட்டுள்ளது. இதற்காகத் தனி நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணையால் இந்தியாவிலும் ரஃபேல் ஊழல் விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ள