சென்னை

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு ரப்பர் பெல்ட் கோடவுனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னையில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் பெல்ட் கோடவுன் ஒன்று செயல்பட்டு வந்தது.  இந்த கோடவுனில் இன்று மாலை திடீர் எனத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.  மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையொட்டி இந்த பகுதியில் வானளாவிய அளவில் கரும்புகை சூழ்ந்துள்ளது.  தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்துள்ளனர்.  தற்போது தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தீவிபத்து நடந்துள்ள இடத்துக்கு அருகில் குடியிருப்போரை காவல்துறையினர் அங்கிருந்து அகற்றி வருகின்றனர்.  அம்பத்தூர் பகுதியில் இந்த தீவிபத்தால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த கோடவுன் சாலை ஓரமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.