டேராடூன்

உத்தராகாண்ட் உயர்நீதிமன்ற தடையை மீறி அம்மாநில அரசு சார்தாம் யாத்திரை  ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

பனிக்காலம் முடிந்து கோடைக் காலம் தொடங்கியதையொட்டி உத்தராகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்கள் மே மாதம் திறக்கப்பட்டன.  இந்த நான்கு தலங்களுக்கும் பக்தர்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரைக்கு சார்தாம் யாத்திரை எனப் பெயர் ஆகும்.   இந்த வருட சார்தாம் யாத்திரை மே மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

கொரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமாக இருந்ததால் இந்த யாத்திரை ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் சென்ற 16 ஆம் தேதி அன்று சார்தாம் யாத்திரைக்கான ஏற்பாடுகளை அரசு தொடங்கியது.   இந்த பயணம் செய்யும் பக்தர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்னும் சான்றிதழ் அவசியம் என அறிவிக்கப்பட்டது.

உத்தராகாண்ட் உயர்நீதிமன்றம் அரசின் இந்த முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.   மேலும் சார்தாம் யாத்திரை குறித்த நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் விசாரணையை ஜூலை 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.   அதுவரை நீதிமன்ற உத்தரவுப்படி அரசு எவ்வித ஏற்பாடும், செய்யக்கூடாது.

ஆனாலும் நீதிமன்ற உத்தரவை மீறி அரசு சார்தாம் யாத்திரை குறித்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அத்துடன் சார்தாம் யாத்திரையின் முதல் கட்டம் வரும் ஜூலை 1 ஆம் தேதி தொடக்கும் எனவும்.  இரண்டாம் கட்டம் ஜூலை 11 அன்று தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து உத்தராகாண்ட் அரசு செய்தி தொடர்பாளர் சுபோத் உனியால், “உத்தராகாண்ட் உச்சநீதிமன்ற உத்தரவை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.   இந்த உத்தரவை எதிர்த்து நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.