சென்னை: நீட் தேர்வு பற்றிய ஆய்வு அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
திமுக தனது சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு செய்யப்படும் என அறிவித்திருந்த நிலையில், ஆட்சிக்கு வந்ததும், அதுகுறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாடு பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், நீட் பாதிப்பு குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்க உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா என கேள்வி எழுப்பியதுடன் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என கூறியதுடன், மனுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , நீட் தேர்வு பற்றிய ஆய்வு குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக பாஜகவின் இரட்டை நிலைப்பாடு வெளியே வந்துள்ளதுசட்டமன்றத்தில் ஆதரவாகவும், வெளியில் எதிர்ப்பாகவும் பாஜகவினர் செயல்படுகின்றனர்.
நீட் தேர்வு விஷயத்தில் பாஜகவின் நிலைப்பாடு பற்றிய அதிமுகவின் கருத்தை எதிர்க்கட்சி தலைவர் தெரிவிக்க வேண்டும். 86,000-க்கும் மேற்பட்டோர் நீட் தேர்வு தொடர்பாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்; 13 மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளனர். ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான வழக்கில் உரிய பதிலை நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்கவும் திமுக மேற்கொண்ட முயற்சியை காரணம்” என்றும் கூறினார்.
மேலும், டெல்டா வைரஸ் குறித்து ஆய்வு செய்ய டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வகம் அமைக்கப்படும். டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் நலமுடன் உள்ளார்கள் என்று தெரிவித்தார்