டெல்லி: இந்திய மக்களின் தடுப்பூசிகளின் தேவைகளை நிறைவுசெய்ய, ஸ்புட்னிக்கை தொடர்ந்து பைசர், மாடர்னா தடுப்பூசி பயன்பாடட்டுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து ஆதிவிரமாக ஆலோசனை நடைபெற்று வருவதாக நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரேனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையில் இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. அதன்படி, பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ தடுப்பூசி மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் உருவாக்கிய ‘கோவிஷீல்ட்’ ஆகிய 2 தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக்-வி’ தடுப்பூசிக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகளில் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
மேலும் பல நாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளும், இந்தியாவில் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்துள்ளன. சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட, ஃபைசர் மற்றும் மாடர்னா போன்ற தடுப்பூசி நிறுவனங்களும் இந்திய பயன்பாட்டுக்கு அனுமதி கோரியுள்ளன. இதுகுறித்து, மத்தியஅரசு ஆராய்ந்து வருகிறது.
இந்த தடுப்பூசிகளை அங்கீகரிப்பதற்கான செயல்முறைகளை விரைவுபடுத்தியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் கோவிட் பணிக்குழு தலைவர் வி.கே.பால் செய்தியளார்களிடம் தெரிவித்துள்ளார். பைசர் நிறுவன தடுப்பூசி தொற்றுநோயைத் தடுப்பதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான செயல்திறனைக் கொண்டுள்ளது என கூறப்படுகிறது.