டெல்லி: தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சித்தலைவராக ஸ்ரீ ஏ. ரேவந்த் ரெட்டி எம்.பி.யை நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சித்தலைவராக ஏ. ரேவந்த் ரெட்டி, எம்.பி. நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
செயல்தலைவர்களாக 5 நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
1. முகமது அசாருதீன்
2. டாக்டர் ஜே.கீதா ரெட்டி
3. எம்.அஞ்சன் குமார் யாதவ்
4. டி. ஜாகா ரெட்டி
5. பி. மகேஷ் குமார் கவுட்
துணைத் தலைவர்கள் 10 நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
1. ஸ்ரீ சந்திரசேகர் சம்பானி
2. ஸ்ரீ தாமோதர் ரெட்டி
3. டாக்டர் ரவி மல்லு
4. ஸ்ரீ போடம் வீரையா
5. ஸ்ரீ சுரேஷ் ஷெட்டக்கர்
6. ஸ்ரீ வேம் நரேந்தர் ரெட்டி
7. ஸ்ரீ ரமேஷ் முதிராஜ்
8. ஸ்ரீ கோபிஷெட்டி நிரஞ்சன்
9. ஸ்ரீ குமார் ராவ். டி
10. ஸ்ரீ ஜாவித் அமீர்
ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.