டெல்லி: உலகின் தலைசிற்நத 100 மருத்துவ கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 2 மருத்துவக்கல்லூரிகள் இடம்பிடித்து சாதனை செய்துள்ளது. வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூ 498வது இடத்தையும், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு 64-வது இடத்தை பிடித்துள்ளது. இது தமிழகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது.
உலகின் தலைசிறந்த 100 மருத்துவக் கல்லூரிகள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்தியாவில் 6 மருத்துவக்கல்லூரிகள் இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு மருத்துவ கல்லூரிகளில் இடம்பிடித்து தமிழகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது.
உலகின் 100 தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் முதலிடத்தை அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் என்ற மருத்துவ பல்கலைக்கழகம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இடம்பிடித்துள்ள ஆறு மருத்துவக்கல்லூரிகளில், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி 23வது இடத்தையும், புனே மருத்துவ கல்லூரி 34வது இடத்தையும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி 59 வது இடத்தையும், வாரனாசி இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவக் கல்லூரி 72 வது இடத்தையும் தமிழகத்தைச் சேர்ந்த வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரி (சிஎம்சி) 49வது இடத்தையும், சென்னை மருத்துவ கல்லூரி (எம்எம்சி) 64 வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்திய அளவில் தமிழகத்தில் 2 மருத்துவக்கல்லூரிகளும், புதுச்சேரியில் ஜிம்பர் மருத்துவக்கல்லூரியும் இடம்பிடித்துள்ள, பெரும் சாதனையாக கருதப்படுகிறது.