சென்னை: தமிழகத்திலும் (Tamil Nadu) ஒரு நாள் தொற்றின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. சென்னையில் தொற்று பரவல்  பரவலாகவே குறைந்து வருகிறது. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில்  நேற்று 6,162 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,49,577 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 372 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் தமிழ்நாட்டில் நேற்று 155 நபர்கள் உயிரிழப்பு. மேலும், 9 ஆயிரத்து 46 பேர் நேற்று மட்டும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பினர்.  தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 31,901 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 49,845 ஆக உள்ளது. சென்னையில் 3,530 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தலைநகர் சென்னையில், நேற்று மட்டும்  372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,30,789 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில்  15 பேர் உயிர் இழந்ததுடன் இதுவரை 8,131 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்  258 பேர் குணம் அடைந்து, இதுவரை  மொத்தம் 5,19,128 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 756 உடன் முதல் இடத்தில் உள்ளது.

24.06.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 24,30,381 பேருக்கும், 24.06.2021 அன்று 31,143 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக விவரம்:ங