டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 51,667 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், 64,527 மீட்டெடுப்புகள் மற்றும் 1,329 பேர் இறந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 51,667 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 3,01,34,445 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 64,527 பேர் தொற்றின் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2,91,28,267 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,329 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம்  இறப்பு எண்ணிக்கை 3,93,310 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில், 6,12,868 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 30,79,48,744 பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.

இந்தியா முழுவதும ஜூன் 24 வரை மொத்தம் 39,95,68,448 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 17,35,781 மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டன என  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்து உள்ளது.

[youtube-feed feed=1]