சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஊரங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக மருத்துவு நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
3 வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 28ஆம் தேதி முடிவடைகிறது. முதல்வர் ஸ்டாலின் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலையின் தாக்கம் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தில் இருந்தது. சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தன. இதனை கட்டுப்படுத்தும் வகையில், மருத்துவ குழு நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிபுணர் குழு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் முதலில் ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் 2 வாரங்கள் தளர்வுகள் அற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு காரணமாக, தொற்று பரவல் குறைந்தது. சென்னையிலும் வெகுவாக குறைந்தது. ஆனால், கோவை உள்டப கொங்கு மண்டலங்களைச் சேர்ந்த 11 மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்தது. அதனால், இந்த 11 தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு நீடித்து வந்தது. பின்னர், தொற்று குறையத் தொடங்கின. இதன்காரணமாக கடந்த 7ஆம் தேதியில் இருந்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டன. பின்னர் கடந்த வாரம் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுடன், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மட்டும் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னையில் குறைந்த தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. மேலும், ஊரடங்கு 28ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், ஊரங்கை மேலும் நீட்டிப்பது குறித்து இன்று முதல்வர் மருத்துவு நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் கட்டுப்பாடுகள், தளர்வுகள், பொதுப்போக்குவரத்து, தடுப்பூசி உள்பட பல பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.