டெல்லி: வங்கிகளின் கடன்வாங்கிவிட்டு, அதை அடைக்காமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய பெரும் தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி.மெகுல் சோக்ஷியின் ரூ. 9,371 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அவர்கள் கடன் வாங்கிய வங்கிகளிடம் ஒப்படைத்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) உள்ளிட்ட வங்கிகளிடம் கடன் பெற்று மோசடி செய்ததாக விஜய் மல்லையா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹுல் சோக்ஸி இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) ₹14,500 மோசடி செய்துள்ளனர். விஜய் மல்லையா , நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி (Mehul Choksi) ஆகியோரின் மோசடிகளால் நஷ்டம் அடைந்த வங்கிகளின் பெயரில், ₹8,441 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் (ED) செவ்வாய்க்கிழமை மாற்றியது. தப்பியோடிய மூன்று பேரும் பொதுத்துறை வங்கிகளில், ₹ 22,586 கோடி மோசடி செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 80.45% அளவில் , அதாவது ₹18,170 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க துறை பறிமுதல் செய்துள்ளது. இதில், ₹9,371 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க துறை (ED) வங்கிகளுக்கு வழங்கியுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த சொத்துக்கள் அனைத்தும், 22ந்தேதி வங்கிகளுக்கு மாற்றப்பட்டதாகவும், இதுவரை, ₹9,371 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன, இது வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளில் 40% ஆகும் என்று தெரிவித்துள்ளது. இதில் ₹329.67 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் அடக்கம் என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.