நயன்தாராவுக்கு வில்லனாக முன்னணி நடிகர் ஒருவர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை நயன்தாரா, ஃபேஷன் ஸ்டுடியோவுடன் இரண்டு படங்களில் நடிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அறிமுக இயக்குநர் ஒருவர் இதில் ஒரு படத்தை இயக்குவதாகவும் அதில் நயன்தாராவுக்கு வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டார், ‘நான் ஈ’ சுதீப் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
’நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் பெற்ற சுதீப், இறுதியாக தபாங் 3 படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.