டில்லி
சுமார் 15 ஆண்டுகள் கழித்து ஒரு இந்தியக் குடியரசுத் தலைவர் ரயில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பொதுவாக இந்திய குடியரசுத் தலைவர் பதவியில் உள்ளோர் எங்குச் சென்றாலும் தனி விமானத்தில் பயணிப்பதே வழக்கமாகும். பாதுகாப்பு காரணமாக இவர்கள் மற்ற பயணிகளைப் போல் ரயில், அல்லது பயணிகள் விமானத்தில் பயணம் செய்வது இல்லை.
கடந்த 2006 ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் டில்லியில் இருந்து டேராடூன் சென்றார். அவர் அப்போது ரயிலில் பயணம் செய்தது மிகவும் அதிசயமாகப் பேசப்பட்டது. அதன் பிறகு எந்த ஒரு குடியரசுத் தலைவரும் ரயிலில் பயணம் செய்யவில்லை.,
தற்போதைய ராம்நாத் கோவிந்த உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பராங் என்னும் ஊரை சேர்ந்தவர் ஆவார். இவர் சொந்த ஊருக்கு ரயிலில் பயணம் செய்ய உள்ளார். சுமார் 15 வருடங்கள் கழித்து ஒரு இந்திய குடியரசுத் தலைவர் ரயிலில் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கதாகும்.