சென்னை:
9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த ஆலோசனையானது நடைபெற்று வருகிறது. தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஊராட்சிகள் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

கடந்த ஆட்சி காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தற்போது சென்னையை தவிர்த்து தென்காசி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் தற்போது 2 துறை அமைச்சர்களோடு தலைமை செயலகத்தில் ஆலோசித்து வருகிறார். மேலும் தலைமை செயலாளர் இறையன்பு, முதல்வரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன், உள்ளாட்சி துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.