திருவனந்தபுரம்

டிகை ஆயிஷா சுல்தானா விடம் அவரது லட்சத்தீவு குறித்த சர்ச்சை கருத்து பற்றி மீண்டும்  விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

பிரபல நடிகையும் இயக்குநருமான ஆயிஷா சுல்தானா லட்சத்தீவு குறித்துத் தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை எழுப்பியது.  அவர் லட்சத்தீவில் கெடுபிடி சட்டங்களை அதன் நிர்வாகி பிரபுல் கோட்டா படேல் கொண்டு வந்ததாகவும் மேலும் மத்திய அரசுடன் இணைந்து அவர் கொரோனாவை பரப்பினார் எனவும் தெரிவித்து இருந்தார்

இது குறித்து ஆயிஷா மீது பாஜக தலைவர் அப்துல் காதர் என்பவர் புகார் அளித்தார்.  இந்த புகாரின் அடிப்படையில்  நடிகை மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டது.  இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என காவல்துறையினர் உத்தரவிட்டனர். இந்த உத்தரவுக்கிணங்க நேற்று முன்தினம் கவுரத்தி ஏஸ் பி அலுவலகத்தில் ஆயிஷா நேரில் விசாரணைக்கு ஆஜரானார்.

ஆயிஷாவிடம் சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவர் 3 நாட்கள் கவுரத்தியில் தங்க வேண்டும் என்னும் நிபந்தனையில் விடுவிக்கப்பட்டார்.  இந்நிலையில்  அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த உள்ளதாகவும் இன்னும் 2 நாட்களில் அவருக்கு இது குறித்த நோட்டிஸ் அளிக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.