முத்தாலங்குறிச்சி: நெல்லை மாவட்டம் முத்தலாங்குறிச்சி அருகே தாமிரபரணி ஆற்றில் 500 ஆண்டுகள் பழமையான சிலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றின் கரையோம் உள்ள முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் சில இளைஞர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது ஒரு சிலை கிடப்பதை கண்டுள்ளனர். ஆற்றில் 500 ஆண்டுகள் பழமையான நந்தி மற்றும் சப்தகன்னி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்துளள்னர். அதன் பின் முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் இரு சிலைகளையும் ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். அவர் அதைப் பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து பேசிய கூறிய விஏஓ, இந்த சிலைகளை முறைப்படி மாவட்ட ஆட்சித் தலைவர் ஒப்புதல் வாங்கி விரைவில் இந்த சிலைகளைத் திருநெல்வேலி அருங்காட்சியகம் காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி அவர்களிடம் ஒப்படைப்போம். அங்கு இந்த சிலைகளின் வரலாறு மற்றும் கிடைத்த இடம் ஊர்ப் பெயருடன் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று கூறினார்.
இந்த சிலைகளை ஆய்வு செய்த தொல்லியல் துறையினர் இச்சிலைகள் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என தெரிவித்துள்ளனர்.