
“பாமக ஆட்சிக்கு வந்தால், கொடுத்த வாக்குறுதிகளை இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றுவோம். இல்லாவிட்டால் முதலமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்வோம்” என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை நகரில் மங்கலம் பேருந்து நிலையம் அருகே, 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பாமக வரைவுத் தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. . இதில் மருத்துவர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
“இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் வாக்காளர்களின் வாக்குகளை விலைக்கு வாங்கும் கலாச்சாரம் உள்ளது. ஆனால் நாங்கள் எந்த ஒரு வாக்காளருக்கம் லஞ்சம் கொடுக்க மாட்டோம்.
பா.ம.க ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஒரு சொட்டு மதுவும், லஞ்சம் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்.
மேலும் பாமக ஆட்சிக்கு வந்த பின்னர், கொடுத்த வாக்குறுதிகளை இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றாவிட்டால், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம்” – இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
Patrikai.com official YouTube Channel