தேநீர் கவிதைகள்
தேநீர் 33%
பா. தேவிமயில் குமார்
தேநீர்க் கடையை தினமும் தாண்டித்தான் செல்கிறேன்!!!!
அனைவரும் ஏதேதோ பேசுவது எனக்குக் கேட்கும் !!
ஓடிப்போன ஜோடியைப் பற்றி ஒரு நாள் !
நடிகையின் அந்தரங்க வாழ்க்கை வேறொரு நாள் !
அரசியல் களம் அலசப்பட்டது மற்றொரு நாள் !
வாங்குவது விற்பது விலை பற்றி இன்னொரு நாள்!
காலநிலை பற்றி கவலையுடன் பிறிதொரு நாள்!
திருநங்கைகளின் திருநாள் பற்றி ஒரு நாள் !
சட்ட மசோதா பற்றி காரசாரமாக மற்றொரு நாள்!
கமலா ஹாரிஸ் என்ற
கருப்பு வைரம் பற்றி ஒரு நாள் …..என
அப்பப்பா எத்தனை களங்கள்
காலம் காலமாய்
அலசப்படுகின்றன!!!
அங்கே!
காதில் வாங்கிய படியே கடந்து செல்வேன் !!!!
ஒரு நாள் நானும் உள் நுழைந்தேன் !
அண்ணா ஒரு டீ என ஆணையிட்டு அமர்ந்தேன் !
பட்டை தம்ளரில் பக்காவான சுவையில் தேநீர்!!
அடடா ….
ஏலமும்,
இஞ்சியும், வஞ்சனையில்லாத
வாசனையோடு
தேநீரில் கலந்திருந்தன
தெய்வீக
காதலர்களை போல!
ரசித்துக்குடித்தேன் ரசவாத ஆராய்ச்சியாளர் போல….
அந்த இடம் அமைதியானது…..
அத்தனை கண்களும் என் மீது ….
ஒரு பெண் உங்களிடத்தில் தேநீர் அருந்தியது தகாத செயலோ??
நாளை முதல் என்னைப் பற்றியும் ஏதேனும் அங்கு பேசக்கூடும் ….
பேசுபொருளாக
நானும் மாறுவேன்!
கண்ணாடி டம்ளரில்
காணப்படும்
திரவமாய்….
மிடறு, மிடறாக
மெதுவாக….
இப்படிக்கு,
தேனீர் கடையில்
தேனீர் அருந்த ஆசைப்படும் பெண்