க்னோ

த்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தாயுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது..   இந்த குற்றவாளிகள் சிறுமிகளையும் விட்டு வைப்பதில்லை.   சமீபத்தில் மாநில தலைநகர் லக்னோவில் உள்ள 14 வயது சிறுமி ஒருவர் தாயாருடன் ஏற்பட்ட சிறு சண்டையால் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.   எங்காவது வேலை பார்த்து பிழைத்துக் கொள்ள முடிவு எடுத்த அந்த சிறுமி மும்பை செல்ல எண்ணி உள்ளார்.

அவர் சார்பாக் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து மும்பை ரயில் ஏறலாம் என முடிவு செய்து அவர் ரயில் நிலையம் செல்ல வழி விசாரித்துள்ளார்.  இதைக் கண்ட இ ரிக்‌ஷா ஓட்டுநரான இக்ரம்தீன் என்பவர் அந்த சிறுமியை விசாரித்துள்ளார்.  அந்த பெண் அவரை நம்பி அனைத்து விவரங்களையும் சொல்லி உள்ளார்.  அதே ஊரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய இக்ரம்தீன் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மாலை நண்பர்களை வீட்டுக்கு அழைத்து அனைவரும் சேர்ந்து அந்த சிறுமியை அடித்துத் துன்புறுத்தி அனைவருமாக கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.  பிறகு அந்த சிறுமியை அவர்கள் வேறு ஒரு சிற்றூருக்கு அழைத்துச் சென்று அங்கும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.  சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். 

அந்த புகாரின் அடிப்படையில் கால்வதுறையினர் அந்த சிறுமியைத் தேடிக் கண்டுபிடித்துள்ளனர்.  மேலும் சிறுமியைக் கூட்டு பலாத்காரம் செய்த இக்ரம்தீன், அவருடைய நண்பர்களான நசீம், சகீல், நூர் முகமது, உத்தம் சர்மா, ரிதேஷ் யாதவ் உள்ளிட்ட 6 பேரையும் காவல்துறையினர் கைது செய்து போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.