சென்னை: இன்று நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ், கொறடவாக எஸ்.பி.வேலுமணியும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று முற்பகல்,. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், துணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். இந்தகூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர், அதிமுக கொறடாவை தேர்வு செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இந்த பதவிகளை பிடிக்க அதிமுக எம்எல்ஏக்களிடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இதனால், ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தைப்போல, இந்த கூட்டத்திலும் சலசலப்பு ஏற்படலாம் என கருதி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, கூட்டத்தில் எம்எல்ஏக்கள் தவிர வேறு யாரும் கலந்துகொள்ள அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று கூட்டம் மதியம் 12 மணி அளவில் தொடங்கியது. ஆலோசனையின்போது, இரட்டைத் தலைமை முறையில் உள்ள சிக்கல்கள், சசிகலா பேசியதாக வெளியான ஆடியோ, விரைவில் கூட உள்ள சட்டப்பேரவையில் நடந்துகொள்வது எப்படி என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா தேர்வு குறித்து முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி,
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தேர்வாகியுள்ளார்.
கொறடாவாக அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணியும்,
துணைகொறடாவாக அரக்கோணம் தொகுதிசட்டமன்ற உறுப்பினர் ரவி,
பொருளாளராக கடம்பூர் ராஜு எம்எல்ஏ,
செயலராளர் ஆக கே.பி.அன்பழகன் எம்எல்ஏ ,
துணைச்செரலாளராக மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.