மும்பை

ரசின் நிதி உதவியுடன் ஆய்வு நடத்திக் கண்டறியப்பட்ட கோவாக்சின் விலை அதிகமாக உள்ளது ஏன் என நிபுணர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கொரோனா அதிகம் பரவி வருவதால் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.   இந்தியாவில் தற்போது கோவிஷீல்ட், கோவாக்சின், மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இவற்றில் ஸ்புட்னிக் வி மிகச் சமீபத்தில் அனுமதி பெற்றுள்ளது.    கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஜனவரி முதல் பயன்பாட்டில் உள்ளது.

சமீபத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.  மேலும் கொரோனா தடுப்பூசிகளை மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்து அதற்கான விலை விவரங்களை அறிவிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

அதன்படி கோவிஷீல்ட் ஒரு டோஸுக்கு ரூ.780, கோவாக்சின் ரூ.1410 மற்றும் ஸ்புட்னிக் ரூ.1145 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.   கோவிஷீல்ட் மருந்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா கண்டுபிடிப்பாகும்.  ஸ்புட்னிக் வி ரஷ்ய நாட்டுக் கண்டுபிடிப்பாகும்.   கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவன கண்டுபிடிப்பாகும்.

அதே வேளையில் இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி அதிக விலையில் விற்கப்படுகிறது.    பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தடுப்பூசி கண்டு பிடிக்க அந்நிறுவன ஆய்வுக்கு இந்திய அரசு நிதி உதவி அளித்துள்ளது.  இவ்வாறு இருக்க கோவாக்சின் தடுப்பூசியை இந்தியாவில் அதிக விலைக்கு விற்பது ஏன் என நிபுணர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கோவாக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனைக்கு முன்பே இந்திய அரசு அவசர கால அனுமதி அளித்துள்ளது.  எனவே ஒரு சில நாடுகளில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை நாட்டினும் அனுமதிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.