கிரிக்கெட்டை அடுத்து ஸ்ரீசாந்துக்கு ஆர்வம் உள்ள துறை சினிமா. இந்நிலையில், இந்திப் படம் ஒன்றில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
ராதாகிருஷ்ணன் இயக்கும் இந்தப் படம் ஒரு எக்ஸ்பெரிமெண்டல் பொலிடிகல் த்ரில்லர். இதில் ஸ்ரீசாந்த் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். படத்துக்கு பட்டா (Patta) என்று பெயர் வைத்துள்ளனர். புத்திசாலியான, சக அதிகாரிகளால் கணிக்க முடியாத அளவுக்கு திறன் வாய்ந்தவராக ஸ்ரீசாந்தின் கதாபாத்திரம் எழுதப்பட்டிருப்பதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்துக்கு சுரேஷ் பீட்டர்ஸ் இசையமைக்கிறார். பிரகாஷ் குட்டி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீதர் நடன அமைப்பை கவனிக்கிறார்.