அறிவோம் தாவரங்களை – அவுரி

அவுரி.(Indigofera tinctoria)

தென்னிந்தியா, வங்காளம், ஆப்பிரிக்கா, வெப்பமண்டல காடுகள் ஆகியவற்றில் காணப்படும் அழகு கொடி நீ!

2 மீ வரை உயரம் வளரும் இனிய செடி நீ!

நீல நிறச் சாயம் தயாரிக்க நீண்ட நாளாகப் பயன்படும் நேர்த்திச்செடி நீ!

வண்ணான் அவுரி உன் இன்னொரு பெயர்!

சித்த வைத்தியத்தில் பயன்படும் சிறப்புச் செடி நீ!

சமஸ்கிருதத்தில் நீ நீலி!

தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகம் வளரும் அருமைக் கொடி நீ!

பாம்புக்கடி, ஒவ்வாமை, மஞ்சள் காமாலை, முடி உதிர்தல், மலச்சிக்கல், கல்லீரல் நோய்கள், சிலந்திக்கடி, எலிக்கடி, தோல் நோய்கள் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

‘உரியியல்அவுரி ….மைந்தருக்குறும் மாந்தம் சீதம் போக்கும் தெரி’ எனக் குணபாடம் போற்றி புகழும் மூலிகைச் செடி நீ! நெல் அறுவடைக்குப் பின் பயிரிடப்படும் அருமைக் கொடியே!

பசுந்தாள் உரமாகப் பயன்படும் பசுமைக் கொடியே!

நிலத்தின் 18 வகை நஞ்சை போக்கும் மருந்து செடியே!

கால்நடைகள் உண்ணாத மேல்நாட்டுக் கொடியே!

ஆங்கிலேயர் விரும்பும் அழகு நீலச்சாயம் தரும் செடியே!

ஆவாரம்பூ செடி இலை வடிவம் கொண்ட இலை செடியே!

வெளிர் மஞ்சள் பூப்பூக்கும் வினோதச் செடியே!

கருப்பு நிறக் காய் கொடுக்கும் கற்பக மூலிகைச் செடியே!

நெல்லை விட நன்மதிப்புக் கொண்ட நல் செடியே!

ஏற்றுமதி செய்யப்படும் இனிய செடியே!

சுமார் 5 கோடி வரை அந்நிய செலவாணி ஈட்டித்தரும் பணப்பயிரே!

பாரம்பரியப் பாட்டி வைத்திய மூலிகையே!

பாடில்லாத சாகுபடி பயிரே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர்.

ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி.

📱9443405050.