சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் தற்போதுள்ள கடைகளை அகற்றிவிட்டு 27 கோடி ரூபாய் செலவில் 900 புதிய கடைகள் அமைத்து கொடுக்கப்படும் என சென்னை கார்ப்பரேசன் தெரிவித்திருந்தது. தற்போது புதிய கடைகள் அமைக்கும் பணியினை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சென்னை மெரினா கடற்கரையில் தற்போது வரை ஆயிரத்து 962 கடைகள் உள்ளதாகவும், தற்போது, அங்கு 900 கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்க இருப்பதாகவும், அதற்காக, ரூ.27.4 கோடி செலவில், 900 வண்டிக்கடைகள் அமைத்துக் கொடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தற்போது புதிய கடைகள் அமைக்கும் பணியினை மாநகராட்சி தொடங்கியுள்ளது.