நடிகர் சூர்யாவும் நடிகர் கார்த்தியும் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களாக இருக்கிறார்கள்.
நடிகர் சூர்யா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அகரம் ஃபவுண்டேஷன் மூலமாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வியையும் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா,கார்த்தி இருவரும் இணைந்து ஒரு கோடி ரூபாய் நிதி உதவி செய்தனர்.
தற்போது நடிகர் சூர்யா தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் 250 பேருக்கு தலா 5,000 ரூபாய் நிதி உதவி செய்துள்ளார். அதேபோல நடிகர் கார்த்தியும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் 150 பேருக்கு தலா 5000 ரூபாய் நிதி உதவி செய்துள்ளார்.