ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.
அட்லியின் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அட்லீ தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ஒன்றில் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர், இப்படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அட்லி இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் குடும்பத்துக்காக தன்னுடைய காதலை தியாகம் செய்பவராக நடித்திருந்தார் ஜெய் என்பது குறிப்பிடத்தக்கது.