பிரதமராக பதவி ஏற்று மோடி 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். ஆனால், அவரது ஆட்சியில் சாமானிய மக்கள் சந்தோஷமாக வாழ்கிறார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே தொடர்ந்து வருகிறது. ஆனால், பிரதமரோ, நாட்டு மக்கள் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல், எப்போதும் போல, அப்பாவியான முகத்தோற்றத்துடன், பகட்டான அறிவிப்புகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்.
அவரது அறிவிப்புகள் வரலாற்றில் தனது பெயர் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே வெளியிடப்பட்டு வருகிறது. பெரும்பாலான அறிவிப்புகள், வெற்று அறிவிப்புகளாகவும், காற்றுபோன பலூன்களாகவுமே காணப்படுகிறது. இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு, இந்திய திருநாட்டின் 136 கோடி மக்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார் பாரதப் பிரதமர்..
கடந்த ஒன்றரை ஆண்டு காலமக, நாடே கொரோனா எனும் பெருந்தொற்றில் சிக்கி சின்னாப்பின்னமாகி உள்ள நிலையில்ர, பிரதமர் மோடிசயோ கொரோனாவைக் கொண்டு அரசியல் சதுரங்கம் ஆடி வருகிறார். அவ்வப்போது மக்களிடையே கொரோனா தொற்று குறித்து பேசி, தான் சிறந்த நிர்வாகி என தன்னைத்தானே பீற்றிக்கொண்டு வருகிறார். கடந்த 5 மாதத்தல் 1313 ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகளை உருவாக்கப்போவதாக அண்ட புளுகு ஆகாச புளுகுகளையும் கூறி, மக்களை ஏமாற்றி வருகிறார்.
ஏற்கனவே கடந்த 5ஆண்டுகால ஆட்சியின்போது, ஒற்றுமைக்கான சிலை (Statue of Unity) என்ற பெயரில், உலகின் உயரமான பட்டேல் சிலையை, திறந்து வைத்து தன்னை பெருமைப்படுத்திக்கொண்டார். அதுபோல தற்போதைய ஆட்சியில் புதிய பாராளுமன்றம் என்ற பெயரில் விஸ்டா திட்டத்துக்கு கோடிக்கணக்கிலல் பணத்தை இறைத்து வருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக. சாமானிய மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதுமட்டுமின்றி, கொரோனா பொதுமுடக்கத்தால் பல நிறுவனங்கள் முடங்கிய நிலையில், வேலைவாய்ப்பும் பறி போனதுடன், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசிக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, திறமையற்ற நிர்வாகத்தால், இந்தியாவின் பொருளாதாரம் தலைகீழாக சென்றுள்ளது. ஆனால், , நாட்டு மக்களோ நாதியற்று கிடக்கின்றனர்.
இந்த நிலையில்தான், கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க நிதி தேவை என நாட்டு மக்களிடம் கையேந்திரனார் மோடி. அதற்காக பிஎம்கேர் என்ற பெயரில் நிதிஅமைத்து தோற்றுவிக்கப்பட்டது.
இந்த நிதியகத்துக்கு, நாட்டின் தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், நடிகர்கள் மற்றும் சாமானியர்கள் என அனைவரும் இயன்ற அளவுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தனர். ஆனால், பிஎம்கேர் நிதிக்கு எவ்வளவு பெறப்பட்டது என்பதை தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் நிதியில் ஒளிவு மறைவு எதற்கு?
இதுதொடர்பாக , உச்சநீதிமன்றத்தில் சில பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அங்கும், தகவலை தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது. இதனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பின. அதையடுத்து, பிரதமர் அலுவலகம் சற்றே வாயை திறந்தது.
அதன்பிறகே, பி.எம் கேர் நிதியிலிருந்து 50 ஆயிரம் வெண்டிலேட்டர்களைத் தயாரிக்க 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பிஎம் கேர் கணக்கிலிருந்து 1000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 50 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் வாங்கப்பட்டதா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
ஏனென்றால், கொரோனா 2வது அலையின் தாக்கத்தில் ஏராளமானோர் ஆக்சிஜன் பற்றாக்குறை, வெண்டிலேட்டர்கள், தடுப்பு மருந்துகள் பற்றாக்குறை காரணம் உயிரிழந்தது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில்தான் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகள் தயாரிக்கப்போவதாக பிரதமர் தொடர்ந்து பீலா விட்டு வருகிறார்.
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்றப்போவதாக வாய்ஜாலம் பேசி வரும் மோடி, ஜனவரி மாசம் 5ந்தேதி அன்று முதன்முதலாக 162 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப் போறோம்னு பந்தாவாக அறிவித்தார். இதற்காக ரூ 201.58 கோடியை ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவசரகால சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிஎஸ்ஏ தொழில்நுட்பத்துடன் கூடிய 162 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்போவதாகவும், அதற்கான திட்ட மதிப்பீட்டில் ரூ .137.33 கோடி உற்பத்திக்காகவும், வழங்கல் மற்றும் மேலாண்மை கட்டணம் மற்றும் விரிவான வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தத்திற்கு ரூ .64.25 கோடி ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த ஆலைகள் 32 மாநிலம் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில்அமைக்கப்பட உள்ளதாகவும், இதன்மூலம் . 154.19 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆனால், அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளாக தொடங்கப்பட்டதா என்றால்…… ?????????????????
இப்படியிருக்க, மீண்டும் 2021ம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி 551 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப் போறோம்னு மற்றொரு அறிவிப்பை பந்தாவாக வெளியிட்டார் பிரதமர் மோடி. அதன்படி, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மேலும் 551 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்வதற்கு PM CARES நிதி கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது என அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம், நாடு முழுவதும் மாவட்ட தலைமையகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த அறிவிப்பாவது நிறைவேற்றப்பட்டதா? என்பது ???????????????
கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் மக்களுக்காக பிஎம் கேர் நிதியில் இருந்து பணம் ஒதுக்குவதாக தொடர்ந்து ஒருபுறம் கூறிக்கொண்டே, மற்றொருபுறம் கொரோனா உயிர்பலிகளை தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், மக்களின் அதிருப்தியை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டார்.
ஆக்சிஜன் ஆலை அமைக்கப்போவதாக 4 மாதத்தில் இரண்டு முறை அறிவிப்பை வெளியிட்டு விட்டு, அதற்கான ஒரு செங்கல்லைக்கூட அசைக்காத மோடி, மக்களை மீண்டும் ஏமாற்றும் வகையில், ஏப்ரல் 28ஆம் தேதி அன்று மேலும், 500 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப் போறோம்னு அறிவித்தார்.
ஏற்கனேவே 2 முறை பிஎம் கேர் நிதியில் இருந்து ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்போவதாக பீலா விட்ட நிலையில், 3வதுமுறையாகவும் 500 ஆக்சிஜன் ஆலைகளை தொடங்கப் போவதாக அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், இந்த முறையாவது ஆலைகளை தொடங்குவதாரா என்று பார்த்தால், அதுவும் வெத்துவேட்டுதான் என்பது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், கொரோனா தொற்றின் 2வது அலை நாடு முழுவதும் பரவி, கொடுமையான சேதங்களை உருவாக்கி விட்டது. ஆக்சிஜன், ஆக்சிஜன் என்று மக்கள் ஆளாய் பறந்த நிலையில், அந்த ஆக்சிஜன் கிடைக்காமலேயே பலரது உயிர் பறந்தது. உயிரிழந்தோரின் உடல்கள் எரிக்கக்கூட இடமில்லாமல், பொதுஇடங்களில் எரியூட்டப்பட்டதும், கங்கையில் உடல்களை வீசப்பட்ட அவலங்களும் அரங்கேறின. இதை உலக நாடுகள் பார்த்து ஏளனமாக கைகொட்டி சிரித்தன.
பிரதமர் மோடி ஜனவரியில் அறிவித்தபடி, ஆக்சிஜன் ஆலைகளை நிறுவியிருந்தால், நாடு இதுபோன்ற ஒரு உயிரிழப்பை சந்தித்திருக்காது. ஆனால், விளம்பர பிரியரான மோடியின் அரசியல் நாடகத்தால், பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்தான் போய்க்கொண்டிருக்கிறது.
ஆனால், மோடியோ, அதை கண்டுகொள்ளாமல், மீண்டும், மே 6ஆம் தேதி 100 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப் போறோம்னு ஒரு அறிவிப்பை வெளியிட்டு, தன்னைத்தானே சந்தோஷப்படுத்திக் கொண்டார்.
பிரதமரின் அறிவிப்பின்படி, கடந்த 5 மாதத்தில் மட்டும் 1313 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்கப்படும் என்றும், இவை அனைத்தும் பிஎம் கேர் நிதியில் இருந்து அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், மோடி அறிவித்தபடி, ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்பட்டதா?
மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கிடைத்ததா?
ஆக்சிஜன் ஆலைகளை உருவாக்குவதற்கான பணிகளை இந்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் மேற்கொண்டதா?
ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க பிஎம்கேர் நிதியில் இருந்து உண்மையிலேயே நிதி ஒதுக்கப்பட்டதா? எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது?
ஆக்சிஜன் ஆலைகள் எங்கெங்கு அமைக்கப்பட வேண்டும் என்று ஆராய்ந்து இடங்கள் கண்டறியப்பட்டதா?
எந்தெந்த மாநிலங்களுக்கு எத்தனை ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும் என ஒதுக்கீடு செய்யப்பட்டதா?
என அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
ஆனால், இதற்கு பிரதமர் அலுவலகமோ, மத்திய சுகாதாரத்துறையோ பதில் அளிக்கும் என நாம் எதிர்பார்த்தால், அது மிகப்பெரிய முட்டாள்தனம்.
ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி முதலாவது பொது முடக்கத்தை அறிவித்தார். அன்று முதல் இன்றுவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டே வருகிறது. அவ்வப்போது, , மான் கி பாத் என்று ரேடியோவில் கதை கூறி வருவதையும், முன்களப்பணியாளர்களை பாராட்டுவதாக வாயில் வடை சுட்டுக்கொண்டிருக்கிறார்.
பிரதமர் கூறியதைப் பார்க்கும்போது, வரும் தீபாவளி வரையில், அதாவது நவம்பர் மாதம் வரை ஊரடங்கை நீட்டிப்பார் என்பது தெரிகிறது. ஆனால், அதுவரை வாழ்வாதாரம் இழந்து, செத்து சுண்ணாம்பாய் மாறி போன அப்பாவி ஏழை மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சாமானிய மக்களின் வாழ்வாதாரம் குறித்து வாய் திறக்க மறுத்து வருகிறார். நாட்டு மக்களின்மீது அக்கறையின்றி, விஸ்டா திட்டத்தில் பிரதமருக்கு எவ்வளவு அழகான மாளிகை வரப்போகிறது என்ற கனவுலகிலேயே சஞ்சரித்து வருகிறார்.
இன்றைய கொரோனா காலக்கட்டத்தில் ஒவ்வொருவரும் எவ்வளவு பெரிய இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர். இன்று இருப்பவர் நாளை இல்லை. நமக்கு அருகே இருந்த அன்புக்குரியவர்கள் பலர் அகாலமாக நம்மை விட்டுச் சென்று விடும் அவலங்கள் தொடர்ந்து வருகிறது. கொரோனா என்ற கொடிய அரக்கனால், பல குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அனாதைகளாகி உள்ளனர். இதற்கெல்லாம் யார் காரணம்? இவ்வளவு இழப்பை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? என்பது குறித்து ஆராய்ந்தால், அதன் முடிவு 100 சதவிகிதம் மோடி அரசின் கையலாகாதனம் என்றுதான் தெரிய வரும்.
கொரோனா 2வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதில், மோடி அரசின் மெத்தனம், சரியான முறையில் திட்டமிடாதது, நெருக்கடியைச் சமாளிக்க, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன், மருத்துவர்களுடன் கலந்தாலோத்து, அவர்களின் ஆலோசனையின்படி செயல்பட தவறியது, நான் தான் எல்லாம், எனக்குத்தான் அனைத்தும் தெரியும் என்ற மோடியின் மமதை காரணமாக, நாட்டில் இன்று பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் உறவுகளை இழந்துள்ளனர். இந்த இழப்புக்கு மோடியே முழுக்க முழுக்க காரணம்.
இந்த நிலையில்தான், நாடு முழுவதும் 1313 ஆக்சிஜன் ஆலைகளை அமைக்கப்போவதாக கடந்த 5 மாதமாக உளறிக்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. ஏற்கனவே பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வரும் பிரதமர் இப்போதைய டிரெண்டுக்கு தகுந்தவாறு ஆக்சிஜன் ஆலையை அமைக்கப்போகிறோம் என்று கூறி வருகிறார். மோடி தலைமையிலான பாஜக அரசின் 7ஆண்டு கால ஆட்சிக்காலம், பாட்டி வடைசுட்ட கதையாகத்தாகவேத்தான் தொடர்கிறது…
136 கோடி மக்களுடன் உலக மக்கள் தொகையில் 2வது இடத்தில் உள்ள இந்திய நாட்டின் பிரதமர், மக்களை ஏமாற்றுவதற்கும், பொய் சொல்வதற்கும் அளவு வேண்டாமா?
கட்டுரை: ஆ.தனசேகரபாண்டி