நடிகர் அசோக் செல்வன் மற்றும் ப்ரியா ஆனந்த் இருவரையும் வைத்து இயக்குனர் Ani.I.V.சசி இயக்கிய “மாயா” என்ற குறும்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அத்துடன் இந்த குறும்படம் வரும் வெள்ளி அன்று ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாக தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ரான் எதான் யோஹன் இசையமைக்க எழுதி இயக்கி எடிட் செய்துள்ளார்.

இயக்குனர் Ani.I.Vசசி . பல சர்வதேச குறும்ப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ள இந்த மாயா குறும்படம் நியூ டெல்லி குறும்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்க்கான விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.