டில்லி
இந்தியாவில் நேற்று 87,295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,295 பேர் அதிகரித்து மொத்தம் 2,89,96,949 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,115 அதிகரித்து மொத்தம் 3,51,344 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 1,85,747 பேர் குணமாகி இதுவரை 2,73,36,799 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 12,97,254 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 10,219 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 58,42,000 ஆகி உள்ளது நேற்று 340 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,00,470 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 21,081 பேர் குணமடைந்து மொத்தம் 55,64,348 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,74,320 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 11,958 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,07,481 ஆகி உள்ளது இதில் நேற்று 340 பேர் உயிர் இழந்து மொத்தம் 31,920 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 27,299 பேர் குணமடைந்து மொத்தம் 24,36,716 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,38,824 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 9,313 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,42,396 ஆகி உள்ளது. இதில் நேற்று 211 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,168 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 21,921 பேர் குணமடைந்து மொத்தம் 24,83,650 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,48,177 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 19,448 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,56,681 ஆகி உள்ளது இதில் நேற்று 351 பேர் உயிர் இழந்து மொத்தம் 27,356 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 31,360 பேர் குணமடைந்து மொத்தம் 19,97,299 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,32,026 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 4,872 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,63,211 ஆகி உள்ளது. நேற்று 86 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 11,552 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 13,702 பேர் குணமடைந்து மொத்தம் 16,37,149 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,14,510 பேர் சிகிச்சையில் உள்ளனர்.