மும்பை

மூத்த பாலிவுட் நடிகர் திலிப்குமார் சுவாசக் கோளாறு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூத்த பாலிவுட் நடிகரான திலிப்குமார் கடந்த 1922 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி பிறந்தவர் ஆவார்.  இவர் தற்போது பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பிறந்தவர் ஆவார்.

விரைவில் நூற்றாண்டை கொண்டாட உள்ள இவர் 1944 முதல் 1996 வரை பாலிவுட்டில் பிரபல நடிகராக விளங்கியவர் ஆவார.   இவரது மனைவி சைராபானுவும்  முன்னாள் பாலிவுட் நடிகை ஆவார்.

இவருக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது.  அவ்வகையில் தற்போது சுவாசக் கோளாறு காரணமாக இவர் மும்பை இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே இவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததாக இவர் மனைவி சைராபானு தெரிவித்துள்ளார்.  இவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.