சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 22,651 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தலைநகர் சென்னையில், 1,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் தொடக்கத்தில் அதிகரித்து வந்த பாதிப்பு தற்போது 2ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று பாதிக்கப்பட்ட 22,651 பேரில் 6 பேர் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். ஆந்திராவிலிருந்து வந்த நான்கு பேர், கர்நாடகா மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து வந்திருந்த இருவரும் இதில் அடங்கும். தலைநகர் சென்னையில் 1,971பேர் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்திலேயே அதிகபட்சமாக கோவையில் 2,810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று புதிதாக 1,971 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,13,229 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல கொரோனா நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி நேற்று 71 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 7,362 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
தொற்று பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று 3,364 பேர் குணம் அடைந்து மொத்தம் 4,79,145 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 26,722 பேர் சிகிச்சையில் உள்ளனர் தினசரி கொரோனா பாதிப்பில் சென்னை 2வது இடத்தில் உள்ளது.
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு: