டில்லி
இந்தியாவில் நேற்று 1,31,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,31,280 பேர் அதிகரித்து மொத்தம் 2,85,72,359 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,705 அதிகரித்து மொத்தம் 3,40,719 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 2,05,808 பேர் குணமாகி இதுவரை 2,65,88,808 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 16,31,427 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 15,229 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 57,91,413 ஆகி உள்ளது நேற்று 643 பேர் உயிர் இழந்து மொத்தம் 97,394 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 25,617 பேர் குணமடைந்து மொத்தம் 54,86,206 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,04,974 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 18,324 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,53,446 ஆகி உள்ளது இதில் நேற்று 514 பேர் உயிர் இழந்து மொத்தம் 30,531 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 24,036 பேர் குணமடைந்து மொத்தம் 23,36,096 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,86,798 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 18,853 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,84,854 ஆகி உள்ளது. இதில் நேற்று 153 பேர் உயிர் இழந்து மொத்தம் 9,376 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 26,569 பேர் குணமடைந்து மொத்தம் 23,90,437 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,84,644 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 24,405 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 21,72,751 ஆகி உள்ளது இதில் நேற்று 460 பேர் உயிர் இழந்து மொத்தம் 25,665 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 32,221 பேர் குணமடைந்து மொத்தம் 18,66,660 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,80,426 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 11,421 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,28,577 ஆகி உள்ளது. நேற்று 108 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 11,213 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 16,223 பேர் குணமடைந்து மொத்தம் 15,78,452 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,38,912 பேர் சிகிச்சையில் உள்ளனர்.