சென்னை:
அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனைத்து அரசுத் துரை செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்றும் இதற்கு முன்பாக பயன்படுத்தப்பட்டதை விட மேம்படுத்தப்பட்டதாக இருப்பதால் இதை பயன்படுத்துவதில் சிரமம் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.