ஜீ.டில்லிபாபு தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தை இயக்க இருந்த புதுமுக இயக்குனர் ராஜா திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பே உயிரிழந்த சம்பவம் தமிழ் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் லாரன்ஸ் மற்றும் ராஜ்கிரண் இணைந்து நடிக்க இருந்த ஒரு புதிய திரைப்படத்தை இயக்குனர் ராஜா இயக்குவதாக இருந்தது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சையில் இருந்த இயக்குனர் ராஜா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விஜய் சேதுபதி நடித்த க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தின் இயக்குனர் விருமாண்டியும் இயக்குனர் ராஜாவும் உதவி இயக்குனர்களாக ஒன்றாக பணியாற்றியுள்ளனர். ஓ மை கடவுளே திரைப்படத்தின் தயாரிப்பிலும் இயக்குனர் ராஜா பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.