மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் அவர்களின் 98வது பிறந்த நாளை இன்று.
உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர். தன் அரசியல் அனுபவங்கள் அனைத்தையும், அடித்தட்டில் வாழ்கிற மக்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டவர்.
பிரபலங்கள் பலரும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் நடிகை குஷ்பூ, கலைஞர் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில்…
“நான் வெற்றிடத்தை உணராத ஒருநாள் கூட இல்லை. ஒரு குரு என்பவர் கடவுளுக்கு மேலே. நீங்கள் என் சிறந்த ஆசிரியராக இருந்தீர்கள். உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் என் மீது பொழிந்துகொன்டே இருக்கும் என்று நான் நம்புகிறேன். மிஸ் யூ அப்பா” என பதிவிட்டுள்ளார்.