சென்னை: கொரோனா பரவலை தடுக்க சென்னை மாநகராட்சிக்கு தமிழக அரசு 88.42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சற்றே குறைந்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் அதிகரித்து காரணப்படுகிறது. கடந்த ஓன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வந்த சென்னை, தற்போது வெகுவாக குறைந்து 2வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசின் பேரிடர் நிதியில் இருந்து சென்னை மாநகராட்சிக்கு ரூ.88.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிதியில் இருந்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 100 மருத்துவர்கள், 200 செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர், ஆய்வகப் பணியாளர், எக்ஸ்ரே பணியாளர், களப்பணியாளர் ஆ உள்ளிட்டோருக்கு ஒரு ஆண்டுக்கு ஊதியமாக வழங்கும் வகையில் இந்த நிதி ஒதுக்கீடு செய்து அரசணை வெளியிடடுள்ளது.