இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு.
இந்நிலையில் ’சேவ் சக்தி ஃபவுண்டேஷன்’ நிறுவனர் வரலட்சுமி சரத்குமாரும், இணை நிறுவனர் சாயாவும் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார்கள்.
இதற்காக திருவல்லிகேணி – சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி ஸ்டாலினை சந்தித்த வரலட்சுமி, ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவு வழங்கப்பட்டுவருவதன் விவரங்களை அளித்தார்.
Save Shakti-Sankalp Beautiful World-Pedigree India சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2டன் உணவு வழங்கபட்டு வருகிறது.இச்சேவையை அனைத்து தரப்புக்கும் கொண்டுசேர்க்க அதன் விவரத்தை Save Shakti அறக்கட்டளை நிறுவனர் @varusarath5 இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு நன்றி.வாழ்த்துகள் pic.twitter.com/gOuZ6sxEcv
— Udhay (@Udhaystalin) June 2, 2021