இத்தாலி:
இத்தாலி நாட்டின் சிசிலி நகரில் உள்ள மிகப்பெரிய எரிமலையான எட்னா நெருப்பு மற்றும் சாம்பலை கக்க தொடங்கியுள்ளது.

கடந்த மாத இறுதியில் இருந்து புகையை வெளியேற்றி வந்த இந்த எரிமலை தற்போது நெருப்பு குழம்பை அதிக அளவில் வெளியேற்றி வருகிறது. இதனால் சுற்றுப்புற பகுதிகளில் இருந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டனர்.

புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும் விளங்கிவரும் அப்பகுதிக்கு பயணிகள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 926 அடி உயரத்தில் இருந்து வெளியேறும் ‘லாவா’ எனப்படும் நெருப்புக் குழம்பு நான்கு புறமும் ஆறாக ஓடிவருகிறது.
Patrikai.com official YouTube Channel