சென்னை: ஊரடங்கு காலத்தில் ஹோட்டல்களுக்கு கோழிக்கறி மற்றும் முட்டை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என காவல்துறைக்கு, கால்நடை மற்றும் பால்வளத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்ததால் கடந்த 24-ம் தேதி முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தொற்று பரவல் கட்டுக்குள் வராததால், தமிழகத்தில் வருகிற 7-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள து. இந்த நிலையில் கடைகள் இயங்க அனுமதியில்லை. உணவகங்களில் குறிப்பிட்ட நேரம் மட்டும் பார்சல் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஊரடங்கு காலத்தில் ஹோட்டல்களுக்கு கோழிக்கறி மற்றும் முட்டை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளியுங்கள் என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு கால்நடை மற்றும் பால்வளத்துறை முதன்மைச் செயலாளர் கடிதம் எழுதி உள்ளார்.