சென்னை: தமிழக அரசு தரப்பில் நீதிமன்றங்களில் ஆஜராக மேலும் 6 வழக்கறிஞர்களை தமிழகஅரசு நியமனம் செய்துள்ளது. இதற்கான உத்தரவை தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளார்.
தேர்தலில் வெற்றிபெற்று ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்றதும், முந்தைய அதிமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட அரசு தலைமை வழக்கறிஞர் உள்பட பெரும்பாலான வழக்கறிஞர்கள், தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அரடிசன் தலைமை வழக்கறிஞராக முன்னாள் திமுக எம்.பி. ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசு தொடர்புடைய பல்வேறு வழக்குகளில் ஆஜராக வழக்கறிஞர்களை தேர்வு செய்யும் நடைமுறை நடைபெற்று வந்தது. அவரது பரிந்துரையின் பேரில், மே 13ஆம் தேதி தற்காலிக அடிப்படையில் 17 பேரை அரசு வழக்கறிஞர்களாக தமிழக அரசு நியமித்தது.
இந்த நிலையில், தற்போது மேலும் 6 வழக்கறிஞர்களை தமிழக அரசு நேற்று (மே 28) நியமித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி,
வெங்கடேஸ்வரன், கே.வி.சஞ்சீவ்குமார், எஸ்.சூர்யா, ரிச்சர்ட்சன் வில்சன், அமிர்தா பூங்கொடி தினகரன், அகிலா ராஜேந்திரன் ஆகியோர் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.