டில்லி

டந்த 2019 ஆம் ஆண்டு முதலே ரூ.2000 அச்சிடுதல் நிறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.  அதன் மூலம் ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் ஒரே இரவில் செல்லாததாகின.  அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் வெளியிடப்பட்டன.

இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்த நடவடிக்கையாகப் பல பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.   ஆனால் மத்திய அரசு அதை ஒப்புக் கொள்ளவில்லை.  கடந்த சில நாட்களாக ரூ.2000 நோட்டுக்கள் கிடைக்காமல் உள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி,

“பாதுகாப்பு பிரச்சினை காரணமாகக் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்தே ரூ.2000 நோட்டுக்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.   மீண்டும் இதுவரை அச்சடிக்கப்படவில்லை.  எனவே 2021-22 நிதி ஆண்டில் புதிய ரூ.2000 நோட்டுக்கள் வெளியாகவில்லை “

எனத் தெரிவித்துள்ளது.